இந்தியன் சூப்பர் லீக் இளைய தலைமுறை வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது...சச்சின் தெண்டுல்கர் பேச்சு
திருவனந்தபுரம் : இளைய தலைமுறை வீரர்களுக்கு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் அடித்தளமாக அமைந்துள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்தாட்டங்களின் 2- வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. கேரள பிளாஸ்டர் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இதற்கு முத்தூட் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது.

கேரள பிளாஸ்டர் கால்பந்தாட்ட அணி வீரர்களின் அறிமுகம் மற்றும் சீருடை (ஜெர்சி) அறிமுக விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமை தாங்கினார். விழாவில், அணி வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து வீரர்களின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உம்மன் சாண்டி மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் சச்சின் தெண்டுகர் பேசியதாவது..
கேரள பிளாஸ்டர் அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக் 2- வது சீசனில் கேரள பிளாஸ்டர் அணி ரசிகர்களின் மேலான ஆதரவுடன் சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக், இளைய தலைமுறை கால்பந்தாட்ட வீரர்களின் திறமையினை வளர்க்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. சர்வதேச வீரர்களுடன் விளையாடும் நமது இளம் வீரர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சச்சின் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications