கிரிக்கெட் கடவுளுக்கு ஒரு ரசிகை எழுதிய உருக்கமான கடிதம்!
திருவனந்தபுரம்: கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கேரளாவைச் சேர்ந்த ரசிகை ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று தனது ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தைப் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அக்கடிதத்தில்,
"சார்
இந்தக் கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் இக்கடித்தத்தை என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட்டின் கடவுளுக்கு எழுதப் போகிறேன். இக்கடிதம் சரியான கைகளில் சேருமா என்று எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
என் பெயர் அஞ்சனா நான் கேரளாவைச் சேர்ந்தவள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருகிறேன். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளை ஆடிய காலத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அவை வெறும் கிரிக்கெட் போட்டிகள் அல்ல, பேட்டால் எழுதப்பட்ட கவிதைகள்.
வெறும் திறமை மட்டும் அல்ல. உங்களது உன்னத குணத்தையும் சேர்த்தது. இதுதான் உங்களை நாங்கள் நேசிக்க முதன்மை காரணம். உங்களது மீது வைக்கப்பட்டுள்ள அன்பிற்கு பல வடிவங்கள் உள்ளன. சிலர் உங்களை மகனாக பார்க்கிறார்கள், சிலர் சகோதரராக பார்க்கிறார்கள், இன்னும் சிலர் உங்களை தோழனாக பார்க்கிறார்கள். இதனால்தான் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.
ஃபேஸ்புக்கில் தாங்கள் அபிமானம்கொண்டவர்களுக்காக முகநூல் பதிவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்த பிறகு நானும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்ற யோசனை என்னுள் வந்தது. கூகுளும் உங்களது முகவரி வழங்கியது. மிக்க நன்றி.
நான் உங்களுக்கு கடிதம் வழங்குவது போல் பலமுறை கனவு கண்டுள்ளேன். ஆனால் தற்போது என் கனவு நினைவாக போகிறது. நிறைய கூற நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் என் முன்னால் தயங்கி நிற்கின்றன. நீங்கள் அடுத்தமுறை கேரளா வந்தால் என் இல்லத்துக்கு வர அழைப்பு விடுப்பேன். அது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
நான் உங்களை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில்தான் பார்த்திருக்கிறேன். உங்களை நேரில் காண்பதென்பதே எனது இறுதியான விருப்பம். உங்களிடமிருந்து ஆட்டோகிராப் கிடைக்கவும் வேண்டுகிறேன். அது நான் பெற்றதிலேயே மதிப்புமிக்கதாக இருக்கும்.
கேரளா பிளாஸ்டர் போன்ற அற்புதமான அணியை தந்ததற்கும் மிக்க நன்றி. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா... நீண்ட நாள் வாழ்க அன்பு மற்றும் நன்றியுடன் அஞ்சனா. எஸ்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அஞ்சனாவின் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சச்சின் "அஞ்சனா உங்களது கடிதத்துக்கு மிக்க நன்றி, உங்களை போன்ற ரசிகர்கள்தான் என்னை இன்னும் சிறந்தவற்றை செய்ய ஊக்கமளிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications