சோனியாவை தரக்குறைவாக பேசிய கிரிராஜ் சிங்... லோக்சபாவில் காங்கிரஸ் கடும் அமளி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிறம் பற்றி பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் வரும் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றவிடக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலை லோக்சபா கூடியதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தோலின் நிறத்தை பற்றி தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அவை கூடிய பிறகு கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தினர். இதையடுத்து தனது இருக்கையில் இருந்து எழுந்த கிரிராஜ் கூறுகையில், நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றார்.
முன்னதாக கிரிராஜ் சிங் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கருப்பின பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸார் கட்சித் தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications