யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது: சசி தரூர்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டது வருத்தம் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் யாகூப் தூக்கிலிடப்பட்டதை அறிந்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வருத்தம் அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வருத்தம்
ஒரு மனிதரை நம் அரசு தூக்கிலிட்டுள்ளது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. மாநில அரசு ஆதரவுடன் நடக்கும் கொலை நம்மையும் கொலைகாரர்களாக ஆக்கியுள்ளது.

தூக்கு
மரண தண்டனை எதையும் தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. எதிர்மாறாக தான் நடக்கும், அது தான் உண்மை. பழிவாங்கும் எண்ணம் தான் இருக்கும், இது அரசுக்கு தேவை இல்லாதது.

தண்டனை
நாம் நிச்சயம் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். ஆனால் மரண தண்டனை எந்த இடத்திலும் தீவிரவாத தாக்குதலை எப்பொழுதுமே தடுத்து நிறுத்தியது இல்லை.

உச்ச நீதிமன்றம்
நான் எந்த வழக்குப் பற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை. அதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மரண தண்டனை கொள்கை மற்றும் நடைமுறையில் இருப்பது தான் பிரச்சனை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications