இந்து பெண்கள் “ஆச்சாரமா” இருக்கனும்.. லிப்ஸ்டிகிற்கு பதில் பர்சில் கத்தி வையுங்க - சாத்வி அட்வைஸ்

இந்து பெண்கள் தங்கள் பர்சில் கத்தி வைத்திருக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்து பெண்கள் தங்கள் பர்சுகளில் லிப்ஸ்டிக் அல்லது சீப்புகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கத்தியை வைத்து இருக்க வேண்டும் எனவும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஹாதியை நெருங்க விடாமல் தவிர்க்க இந்து பெண்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க இந்துத்துவ அமைப்புகள் இப்போது பிரச்சார பணிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

இதில் பல்வேறு தலைவர்கள் மத பிரச்சனைகளை கிளப்பும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

சாத்வி பிராச்சி

சாத்வி பிராச்சி

இந்த நிலையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி மத்திய பிரதேச மாநிலம் ரத்லாமில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் பேசுகையில் ஜிஹாதிகளை நெருங்க விடாமல் இந்து பெண்கள் தடுக்க வேண்டும்.

கத்தி வைத்திருக்க வேண்டும்

கத்தி வைத்திருக்க வேண்டும்

அதற்கு நீங்கள் உங்கள் கைப்பையில் லிப்ஸ்டிகோ சீப்போ வைத்திருக்கக்கூடாது. மாறாக உங்கள் கைப்பையில் ஜிஹாதிகளுக்கு பதிலடி கொடுக்க கத்தியை வைத்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்காகவே இருக்கிறார்கள். இந்து பெண்கள் அனைவரும் மதத்தை மரபு வழியில் முழுமையாக பின்பற்றி ஆச்சாரமாக இருக்க வேண்டும்.

ஜிஹாதிகளை நெருங்க விடக்கூடாது

ஜிஹாதிகளை நெருங்க விடக்கூடாது

டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர் இந்து பெண்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என்றார். அத்துடன் ஜம்மியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதனியின் ஓம் அல்லா என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், "மதனிக்கு இந்து மதத்தின் ஏ, பி, சி, டி பற்றி தெரியாது." என்றார்.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்ற சாத்வி பிராச்சி, இதற்கு முன் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உள்ளதுடன், கொலை மிரட்டல்களையும், வன்முறையை தூண்டும் பேச்சுக்களையும் பேசி இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநில பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவரான சாத்வி பிராச்சி, 14 வயதிலேயே மதப்பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+