பெற்றோருடன் போராடி அனுமதி பெற்று சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்
ஹைதராபாத்: பெற்றோருடன் போராடி அனுமதி பெற்று சுற்றுலா சென்ற மகேன் சாய் ராஜ் என்ற மாணவர் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் 6 மாணவிகள், 18 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் அகுலா விஜேதா, கம்பாலா ஐஸ்வர்யா உள்ளிட்ட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியரின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஐஸ்வர்யா
கம்பாலா ஐஸ்வர்யா பி.இ. முடித்த பிறகு வெளிநாட்டிற்கு சென்று மேல்படிப்பு படிக்க ஆசைப்பட்டுள்ளார். அவர் சுற்றுலா சென்று வரும்போது உங்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறேன் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மஹேன் சாய் ராஜ்
21 வயதான மஹேன் சாய் ராஜ் தனது வகுப்பில் படிப்பவர்களுடன் சென்ற முதல் சுற்றுலா இது தான். செகந்திராபாத்தைச் சேர்ந்த அவர் தனது பெற்றோரிடம் சண்டை போட்டு அனுமதி வாங்கி சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆசிஷ்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆசிஷ் மந்தாவுக்கு சினிமா படங்கள் என்றால் உயிர். அவருக்கு பிடித்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

தப்பி வந்தோர்
பியாஸ் ஆற்றில் சிக்கி தப்பி வந்த மாணவ, மாணவியர் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சோகத்தை கண்ணீர் மல்க விவரித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications