ஆப்பிரிக்க சிறையில் கணவன், பிண அறையில் மகன்: இந்திய கப்பல் கேப்டனின் மனைவி கண்ணீர்
மும்பை: ஆப்பிரிக்க சிறையில் வாடும் கணவனை மீட்டுத் தருமாறு மத்திய அரசிடம் மன்றாடும் இந்திய கப்பல் கேப்டனின் மனைவி தற்போது தன்னுடைய 11 மாத ஆண் குழந்தை இறந்த சோகத்தில் மூழ்கியுள்ளார்.
இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார். கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி அதிதி மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறார். இந்நிலையில் அவர்களின் 11 மாத ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த 2ம் தேதி உயிர் இழந்தது. குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் அதிதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications