முழு பலத்துடன் மீண்டு வருவேன்... சாய்னா நேவால் நம்பிக்கை!
ஹைதராபாத்: தோல்விகளிலிருந்து முழு பலத்துடன் மீண்டு வருவேன் என்று இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறினார் இந்திய வீராங்கனை சாய்னா நேவால். அவர் வலது முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சாய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வரும் சாய்னா, இந்த மாத இறுதியில் துபாயில் நடைபெறவிருக்கும் உலக பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சாய்னா நேவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''இந்த தோல்விகளிலிருந்து மீண்டு முழு பலத்துடன் திரும்பி வரவேண்டும் என்பதே எனது ஆசை. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக விளையாடியது போன்று அடுத்த இரண்டு, மூன்று வருடங்களும் விளையாட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான் முழுபலத்துடன் விளையாட வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாகவும் இருக்கலாம்'' என்றார்.
சாய்னாவின் காயம் குணமடைந்து டிசம்பர் மாதம் முழு உடற்தகுதியுடன் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகள் காரணமாக அவர் உலக தரவரிசையில் 5-வது இடத்திலிருந்து 9-இடத்திற்கு சரிந்துள்ளார்.
உடல்நிலை காரணமாக அடுத்து வரவிருக்கும் ஜப்பான், டென்மார்க், பிரான்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சாய்னா கலந்து கொள்ள மாட்டார். இதனால் அவரது தரவரிசை மேலும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications