திருப்பதி: ஏழுமலையானை விரைவில் தரிசிக்க தபால் நிலையங்களில் டிக்கெட் விற்பனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் இனி தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்வதற்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டது. திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் 11 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

அத்துடன் இன்னும் கூடுதலாக பயோ மெட்ரிக் மூலம் தபால் நிலையங்களில் 4 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பயோமெட்ரிக் மூலம் தபால் நிலையங்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கும் பணி இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முதல் கட்டமாக திருப்பதி, சித்தூர், விஜயநகரம், வாரங்கல், ஏழுர் உள்பட 91 தபால் நிலையங்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் இன்னும் கூடுதலாக 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படும். பல ஊர்களில் திட்டம் விரிவுபடுத்தப்படும். அத்துடன் தகவல் மையங்களிலும் வழங்கப்படும்.
ஒரு டிக்கெட்டுக்கு 3 ரூபாய் 16 பைசா செலவாகிறது. அந்த தொகையை சம்பந்தப்பட்ட தபால் நிலையத்துக்கு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications