தானேவும் இல்லை தலோஜாவும் இல்லை,ஆர்தர் சாலையும் இல்லை.. வீட்டுக்குப் போனார் சல்மான்!
மும்பை: கார் விபத்து வழக்கில் 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை ஆர்தர்ரோட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி சல்மான் கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது அவர் தானே மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் 18 நாட்கள் கழித்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து சல்மான் கானை மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தானேவும் இல்லை தலோஜாவும் இல்லை

முன்னதாக சல்மான்கான் தானே சிறை அல்லது தலோஜா சிறையில் அடைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில் சல்மான்கான் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து கருத்து கூறிய சிறை அதிகாரி, எந்த சிறையில் அடைப்பது என்று சிறை நிர்வாகம்தான் எந்த சிறை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சிறைத்துறை டிஐஜி இதுகுறித்து முடிவெடுப்பார். அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட மா்ட்டாது. அனைத்து குற்றவாளிகளையும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் பாவிப்போம். விதிப்படி முதலில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் சல்மான் கான். பின்னர் அவர்கள், அவரை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். சிறை அதிகாரிகள், எந்த சிறை என்பதை முடிவு செய்து அங்கு போய் அடைப்பார்கள்.

கொங்கன் பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் பொதுவாக தானே அல்லது தலோஜா சிறையில்தான் அடைக்கப்படுவது வழக்கம். எனவே சல்மான் கானும் இந்த இரு சிறைகளில் ஒன்றில் அடைக்கப்படலாம். சிறையில் அவர் சாதாரண தண்டனை பெற்ற கைதியாகத்தான் நடத்தப்படுவார். இருப்பினும் அவரது பிரபலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். இதுதொடர்பாக சிறைத்துறையினருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடைசியில் சல்மான்கான் தானேவுக்கும் போகவில்லை தலோஜாவுக்கும் போகவில்லை மும்பை ஆர்தர்ரோடு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications