அந்த மானை நான் சுடவே இல்லை.. ஜோத்பூர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்த சல்மான்!
ஜோத்பூர்: என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது, நான் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட மான்களை சுடவில்லை என்று நடிகர் சல்மான் கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக சல்மான்கான் ஜோத்பூர் வந்திருந்தார். அவருடன் மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும் உடன் வந்தனர். அவ்வாறு தங்கியிருந்தபோது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்திற்கு சென்ற சல்மான்கான், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த 16 வருடங்களாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. மானை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் சல்மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கி் ஜோத்பூர் கோர்ட் சல்மான் கானை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆஜரான சல்மான் கான் நீதிபதி அனுபமா பிஜ்லானி முன்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications