‛‛ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பீடு’’.. காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா? மோடி கேள்வி
அமராவதி: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் தமிழர் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறிக்க தயாரா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக உள்ளவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். தற்போது ராகுல் காந்திக்கு ஆலோசகராக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சாம் பிட்ரோடாவின கருத்து சர்ச்சையை கிளப்பி வருகின்றன. ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாம் பிட்ரோடா தோல் நிறத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்து இருப்பது தான் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.
அதாவது சாம் பிட்ரோடா "பல்வகைத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்" என்று பேசினார்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகயைி்ல, ‛‛சாம் பி்டரோடா ராகுல் காந்தியின் ஆலோசகராக இருக்கிறார். அவரது கருத்தை தென்னிந்தியாவில் முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா (கர்நாடகா), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) ஏற்றுக்கொள்வார்களா?.
மேலும் நாள்தோறும் தமிழர்களின் கலாசாரம், பெருமை பற்றி பேசும் ஸ்டாலின் இந்த கூற்றை ஏற்கிறாரா? தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சி உடனான உறவை அவர் முறித்து கொள்வாரா? அதற்கான துணிச்சல் ஸ்டாலினிடம் இருக்கிறதா?. பிரித்தாள்வது தான் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியாக இருக்கிறது'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications