“புல்டோசர் ஆக்சன்”.. உபியில் சமாஜ்வாடி தலைவர் வீடு இடிப்பு! கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத் அதிரடி
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அதீக் அஹமதுவின் நெருங்கிய உறவினர் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கின் சாட்சியாக இருந்தவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அதீக் அஹமதுவின் நெருங்கிய உறவினரின் வீடு புல்டோசர் மூலம் இடித்து தகர்க்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜு பால் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவருடன் சேர்த்து வீட்டில் இருந்த பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. ராஜு பாலை சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும் அதீக் அஹமது முன் விரோதம் காரணமாக கொன்று விட்டதாக கூறப்பட்டது. அதீக் அஹமது அப்பகுதியில் ரவுடியாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட சாட்சி
இந்த கொலை வழக்கில் சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால் என்ற வழக்கறிஞர். அவர் அதீக் அஹமதுதான் இந்த கொலையில் ஈடுபட்டார் எனக் கூறி வந்தார். இந்த நிலையில், அவரிடம் வாக்குமூலத்தை வாங்குவதற்கு முன், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அஹமதாபாத் சிறையில் உள்ள அதீக் அஹமதுவுக்கு நெருக்கமான 5, 6 பேர் கொண்ட கும்பலால் உமேஷ் பால் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

என்கவுண்டர்
இது தொடர்பாக அதீக் அஹமது, அவரது மகன் ஆசாத் அஹமது, அவரது மனைவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சைஸ்தா பர்வீன் ஆகியோரது பெயர்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கடந்த திங்கள் கிழமை என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்.

வீட்டை இடித்த புல்டோசர்
இந்த நிலையில்தான் பிரயாக்ராஜில் உள்ள அதீக் அஹமதுவின் நெருங்கிய உறவினரான ஜாஃபர் அஹமதுவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு அவரை காணவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அதீக் அஹமதுவின் மனைவியும் மகனும் பங்களா ஒன்றில் இருப்பதாக தகவல் வெளியானது. அங்கு சென்று சோதனையிட்ட போலீசார் ஆயுதங்களை கைப்பற்றி உள்ளனர்.

கார்கள் பறிமுதல்
இன்று காலை அதீக் அஹமதுவின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு இருந்த விலை உயர்ந்த 2 கார்களை பறிமுதல் செய்து உள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபரை சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது உண்மை அல்லவா?

யோகி ஆதித்யநாத் விளக்கம்
குற்றவாளிகளை வளர்த்து அவர்களுக்கு மாலை போட்டு குற்றங்கள் நடந்த பிறகு மற்றவர்கள் மீது குறை சொல்கிறீர்கள். இதன் மூலம் உங்களை நீங்களே காட்சிப்படுத்திக்கொள்கிறீர்கள்." என்றார். உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசு தங்களை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசியல் எதிர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications