நடிகர் சஞ்சய்தத்துக்கு சிறையில் பீர், ரம்: பாஜக புகார்
மும்பை: சிறையில் உள்ள நடிகர் சஞ்சய்தத்திற்கு பீர், ரம் போன்றவை கொடுக்கப்படுவதாக பாஜகவைச் சேர்ந்த மராட்டிய மாநில எதிர்கட்சித்தலைவர் வினோர் தவேதி பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடிகர் சஞ்சய்தத்துக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பா.ஜ.க. முன்னணி தலைவரும், மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவருமான வினோத் தவேதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். மராட்டிய மாநில சட்டசபை கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
மராட்டிய மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மராட்டியத்தில் 216 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார்கள். அவருக்கு இரவு நேரங்களில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் கூட கொடுக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதுபற்றி உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், மகளிர் மேம்பாட்டு மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஆய்வு நடத்தினால் உண்மை தெரியும். ஏராளமான கிரிமினல் வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை.
அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. குற்றவாளிகளிடம் அரசு மென்மையாக நடந்து கொள்வதால் 93 சதவீத குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் வினோத் தவேதி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பதாக மராட்டிய மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications