சஞ்சய்தத்துக்கு ‘பரோல்’ நீட்டிப்பு ஏன்? மகா. அரசுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
டெல்லி: நடிகர் சஞ்சய்தத்துக்கு தொடர்ச்சியாக பரோல் நீட்டிப்பு செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ்அனுப்பி உள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் நடிகர் சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சஞ்சய்தத் தமது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆண்டு அக்டோபரில் 15 நாட்கள் பரோலில் வெளிவந்தார். அந்த பரோல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மனைவி மான்யதா உடல்நலக்குறைவை தொடர்ந்து சஞ்சய் தத் டிசம்பர் 21-ந்தேதி ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்தார். அப்போது அவரது பரோலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தன. ஆனாலும் எதிர்ப்பை மீறி பரோல் வழங்கப்பட்டது.
அவர் பரோல் முடிந்து கடந்த ஜனவரி 21-ந்தேதி சிறை சென்றிருக்க வேண்டும். ஆனால் உடல்நலமுற்ற மனைவியை உடன் இருந்து கவனித்துக்கொள்வதற்காக மீண்டும் ஒரு மாதம் பரோலும், அதனை அடுத்து 2-வது முறையாக மற்றொரு மாதம் பரோலும் நீட்டிக்கப்பட்டது.
இந் நிலையில் சஞ்சய் தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உள்ளது. அவருக்கு தனிச்சலுகை காட்டுவது ஏன்? என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications