சாரதா சிட்பண்ட் மோசடி: ரூ. 60 கோடி சொத்துக்கள் முடக்கிய அமலாக்கத்துறை!
டெல்லி: மேற்கு வங்காள சாரதா சிட்பண்ட் நிறுவன வழக்கில் மேலும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம் ஆனது. அசாம், ஒரிசா மாநிலங்களிலும் இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, சிட்பண்ட் நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூபாய் 400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே முடக்கியுள்ளது.
தற்போது மீண்டும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் உயர்நிலை பள்ளிக்கூடம், சிமெண்ட் தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் ஆகிய சொத்துக்களும் அடங்கும்.
இவற்றை சிட்பண்ட் நிர்வாகிகள் பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ள தகவலையும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications