ஜெ.வைத் தொடர்ந்து இன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில் இன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த நான்கு பேருக்கும் மொத்தமாக ஜாமீன் கேட்டு அது மொத்தமாக நிராகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்படி மொத்தமாக ஜாமீன் கேட்டது தவறு என்று பல்வேறு வக்கீல்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

Sasikala and 2 others seek bail in SC

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனியாக ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அதில், தனக்கு 66 வயதாகிறது. உடலில் நிறைய நோய்கள் உள்ளன. எனவே அதைக் கருத்தில் கொண்டும், பெண் என்பதை கருத்தில் கொண்டும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+