சிபிஐ விசாரணையில் இருந்து சசிகலா தப்ப முடியாது - சசிகலா புஷ்பா ஆவேசம்
சிபிஐ விசாரணையில் இருந்து சசிகலா தப்பமுடியாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி: சிபிஜ விசாரணையில் இருந்து சசிகலா தப்ப முடியாது என ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா பஷ்பா கூறியுள்ளார்.. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா கடந்த மாதம் 19ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தக் கடிதம் தற்போது சிபிஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் மனு 20 நாட்களில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டிருப்பது, ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஆதரவளிப்பதாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றிற்கு சசிகலா புஷ்பா பேட்டியளித்துள்ளார்.
அதில் "சசிகலா கும்பலின் சதியால்தான் ஜெயலலிதா மரணமடைந் திருக்கிறார். செப்டம்பர் 22ம் தேதி எந்த சூழலில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்பதில் தொடங்கி அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள், செலுத்தப்பட்ட மருந்துகள், இதய துடிப்பு நின்றதாகச் சொல்லப்பட்டது வரையிலும் மர்மங்கள்தான். 75 நாட்களில் நடந்த சதியை வெளிக்கொணரத்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருக்கிறேன்.
என்னை விசாரிக்கும்போது பல உண்மைகளைச் சொல்வேன். சி.பி.ஐ. விசாரணையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நான் ஓயமாட்டேன்" என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications