இளவரசியோட இப்போ இல்லையாம்.. தனி அறைக்கு மாறிட்டாராம் சசிகலா.. ஜெ. சினிமாதான் டைம் பாஸாம்
பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தற்போது இளவரசியின் அறையில் இருந்து மாறி வேறு அறையில் உள்ளாராம்.
பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அவர் அடைக்கப்பட்ட போது, அவரது உறவினர் இளவரசியுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று கோரி, அறை எண் 2-டை கேட்டுப் பெற்றார் சசிகலா.
ஒரே அறையில் இளவரசியுடன் இருந்ததால், அவரிடம் பேசி சசிகலா பொழுதை கழித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென இளவரசியைப் பிரிந்து சசிகலா தனி அறைக்கு சென்றுவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அறை எண் 4
சசிகலா இப்போது அறை எண் 2ல் இருந்து மாறி அறை எண் 4ல் உள்ளார். இதனை பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர். சிறையில் இளவரசியுடன் ஒரே அறையில் இருந்த சசிகலா சுமார் 2 மாதத்துக்குப் பிறகு திடீரென வேறு அறைக்கு மாறியது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.

என்னென்ன வசதி
சசிகலா அடைக்கப்பட்டுள்ள புது அறையில் படுக்கை, நாற்காலி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இங்கும் கொசு அதிகம் என்பதால் கொசு வலையை சசிகலா பயன்படுத்துகிறார். இரவு உணவை கூட அவர் கொசு வலைக்குள் அமர்ந்துதான் சாப்பிடுகிறார் என்கிறது தகவல்.

நடைபயிற்சி
புதிய அறைக்கு மாற்றப்பட்ட பின்னர், சசிகலா வெளியே போய் நடைபயிற்சி மேற்கொள்வதை நிறுத்திவிட்டாராம். அதற்கு பதிலாக அறைக்குள்ளேயே நடந்து பயிற்சியை முடித்துக் கொள்கிறாராம்.

நூலகம் சென்று..
சிறைக்குள் இருப்பதால், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள சிறையில் உள்ள நூலகத்திற்கு தினமும் செல்வதை வாடிக்கையாக்கிவிட்டாராம் சசிகலா. அங்கு செல்லும் அவர் தமிழ் தின இதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகளை படித்து வருகிறாராம்.

ஜெ. சினிமா
பத்திரிகைகளை படித்த பின்னர், தொலைக்காட்சிகளில் என்ன ஓடுகிறது என்பதை பார்த்து வருகிறாராம் சசிகலா. பெரும்பாலும் ஜெயலலிதா நடித்த பழைய சினிமாக்களை பார்த்து வரும் சசிகலாவிற்கு நன்றாக பொழுது போகிறது என்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications