எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெ.,தான் பொறுப்பு - சசிகலா புஷ்பா ஆவேச பேட்டி !
டெல்லி: தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணமாக இருக்க முடியும் என்றும் அதிமுகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி களேபரத்தை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா கூறியதாவது: என் மீது பொய்யான குற்றச்சாட்டை 2 பெண்கள் கூறியுள்ளனர். அவர்களை மிரட்டியே அந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.
என்னை பழிவாங்கவே இவ்வளவு செயல்களையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்த்து நிற்கும் வல்லமை எனக்கு உள்ளது. என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களை எல்லாம் மாநிலங்களவையில் பதிவு செய்வேன். ஒரு பெண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்தவா ஒரு பெண்ணை தமிழக மக்கள் முதல்வராக தேர்தெடுத்துள்ளனர்.
எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதான் காரணமாக இருக்க முடியும். அதிமுகவினரே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதிமுக-வில் இன்னும் பலர் குமுறி கொண்டு இருக்கிறார்கள் நான் வெளிப்படையாக பேசிவிட்டேன். இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications