ஜெ.வுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமியுடன் கை கோர்க்கும் சசிகலா புஷ்பா
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா தற்போது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்குப் போன சசிகலா புஷ்பா பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து தமக்கான ஒரு லாபியை உருவாக்கிக் கொண்டார். அப்படித்தான் திமுக எம்பியான திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
இருவருக்குமான பணப் பரிமாற்றத்தில் பஞ்சாயத்து நடக்க அதுதான் டெல்லி விமான நிலையத்தில் பகிரங்க மோதலானாதாகவும் கூறப்படுகிறது. சிவாவை டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா தாக்கியது குறித்து ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தி பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.

கனிமொழி, குலாம்நபி ஆதரவு
ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவை மதிக்காமல் அவர் தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் பகிரங்கமாக புகார் கூறினார். அப்போது திமுகவின் கனிமொழி, காங்கிரசின் குலாம்நபி ஆசாத் ஆகியோர் சசிகலா புஷ்பாவை ஆதரித்து பேசினர்.

முன்ஜாமீன் மனு
இந்த நிலையில் தமிழகத்தில் சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் வர வழக்குகளும் பதியப்பட்டன. இதனால் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா.

இடைக்கால தடை
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவ கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே டெல்லியிலும் தமிழகத்திலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு சசிகலா புஷ்பா கேட்டு வருகிறார்.

சு.சுவாமி ஆதரவு
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைப்படிதான் இப்படியான ஆதரவை கோரி வருகிறாராம் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்தை ஊதி பெருக்குவது என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமாம்... சசிகலா புஷ்பாவும் சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவு தமக்கு பெரும் பலம் என நம்புகிறாராம்.
இதனால் சு.சுவாமியின் ஆலோசனைகளை ஒரு சிஷ்யை போல பணிவோடு ஏற்று ஜெயலலிதாவுக்கு எதிரான தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளாராம் சசிகலா புஷ்பா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications