பாலியல் தொல்லை புகார்... கைது அச்சத்தால் டெல்லி ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மனு!!
டெல்லி: வீட்டில் வேலைபார்த்த இளம்பெண்கள் தூத்துக்குடி போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீன் தரக் கோரி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்த புகார்கள் போலீசுக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதில் உச்சகட்டம் அவரது வீட்டில் வேலை பார்த்த 2 இளம்பெண்கள், தூத்துக்குடி போலீசில் நேற்று கொடுத்ததுதான்.

அதில், சசிகலா புஷ்பா இரவில் நிர்வாணமாக மசாஜ் செய்துவிட சொல்வார்; அமைச்சர் பழனியப்பனுடன் குடித்து கும்மாளம் போடுவார்; அவரது மகன் பாலியல் தொல்லை கொடுத்தாலும் அட்ஜஸ்ட் செய்ய சொன்னார் என ஏகத்துக்குமாக புகார் கொடுத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் சசிகலா புஷ்பா தமிழகம் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமது வீட்டில் வேலைபார்த்த பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டதால் முன்ஜாமீன் வழங்க கோரியிருக்கிறார் சசிகலா புஷ்பா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications