பாலியல் வழக்கு.. சசிகலா புஷ்பாவின் அம்மாவுக்கு முன்ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. பாலியல் வன்முறை வழக்கில் அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனிடையே சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கெளரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த 2 பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 14-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த செப். 26-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல் நிலையங்களில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கௌரி சார்பில் வழக்கறிஞர் டி. அபினவ் ராவ் ஆஜராகி, "சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருக்கு எதிராக தமிழகத்தில் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அவரை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே புகார்களில் சசிகலா புஷ்பாவின் தாயார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் மீதும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு, மனுதாரர் கௌரிக்கும் பொருந்தும்' என்று உத்தரவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications