அதிமுகவை கைப்பற்ற சசிகலா சதி; 2-ம் கட்ட தலைவர்களே தடுத்து நிறுத்துங்கள்... சசிகலா புஷ்பா அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா நடராஜன் கும்பல் சதி செய்வதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்கா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டி:

2011ம் ஆண்டு 16 பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து வெளியேற்றினார். சசிகலா நடராஜன் உள்பட. எதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அதற்கு கூறிய காரணம், என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எனக்கு பின்னால் இருந்து துரோகம் செய்தார்கள். சதி செய்து ஆட்சியை கலைக்கப்பார்த்தார்கள் என்று துரோக குற்றச்சாட்டு சசிகலா நடராஜன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தி, சிலரை சிறையில் கூட அடைத்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மீண்டும் அப்படியேதேனும் சதி செய்யப்பட்டதா என்று தொண்டர்கள் மத்தியிலும், என் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

தஞ்சாவூரில் சசிகலா போட்டி?

தஞ்சாவூரில் சசிகலா போட்டி?

கடந்த சில தினங்களாக பார்த்தால் சசிகலா நடராஜன் ஏன் கட்சியை பிடிக்கக் கூடாது. ஏன் அவர் துணைப் பொதுச்செயலாளராக ஆக்கப்படக்கூடாது. சசிகலா நடராஜன் ஏன் தஞ்சாவூரில் சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்படக்கூடாது என அவர்களே வேறொருவர் கூறுவதைப்போல பத்திரிக்கைகள், வாட்ஸ்அப்களில் செய்திகளை பரப்பிப்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான செயல்.

விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம் செய்கிறார்கள்

ஏனென்றால் ஜெயலலிதா 2011ல் அவரை கட்சியில் இருந்து நீக்கிப்பின்னர் மீண்டும் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து என்ன கூறி வந்தார்கள். நான் அக்காவுக்கு என்றைக்குமே உழைக்கக் கூடிய சேவகியாகத்தான் இருப்பேன். ஒரு கவுன்சிலர் பதவிக் கூட நான் வாங்க மாட்டேன். அரசியலில் எந்த ஒரு கட்சிப் பதவியும் எனக்கு வேண்டாம் என்று சொன்ன சசிகலா நடராஜன், ஏன் இன்று தஞ்சாவூரில் நிற்கலாமே என்று வேறொவரை சொல்ல வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அப்படியென்றால் முதலமைச்ருக்கு இவர்களின் கும்பலால் ஏதேனும் செய்யப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் வருகிறது.

சசிகலாவை ஏற்கமாட்டார்கள்

சசிகலாவை ஏற்கமாட்டார்கள்

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக சசிகலா நடராஜனை ஒருபோதும் யாரும் ஏற்கமாட்டார்கள். அதிமுகவை சசிகலா கும்பல் கைப்பற்றிவிடுமோ, அவர்களது உறவினர்களுக்கும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே பதவி உள்ளிட்ட அனைத்துமே கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.

வெளியே வாருங்கள்...

வெளியே வாருங்கள்...

ஆகையால் அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் இப்போதாவது வெளியே வரவேண்டும். அதிமுகவைக் காப்பாற்ற அவர்கள் இப்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+