அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்: சசிகலா புஷ்பா அதிரடி பேட்டி !
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
டெல்லி: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் எனவும் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது.
அதிமுகவில் இருந்து இன்னும் என்னை நீக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது வரை மாநிலங்களவை ஆவணத்தில் நான் அதிமுக எம்.பி.யாகவே நீடிக்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. மக்கள் முன் நாடகம் ஆட கட்சி தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications