எங்கள் அணி வேட்பாளர் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படுவார்.. டிடிவி தினகரன் தகவல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சசிகலா அணி சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் எனக் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தையே மீண்டும் கேட்போம் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கையை அர்ப்பணித்த சசி
ஜெயலலிதாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

நிச்சயம் வெற்றி பெறுவோம்
இரட்டை இலைச்சின்னம் தொடர்பான தீர்ப்பு தற்காலிகமானது என்றும் அவர் கூறினார். இதனை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவுடன் தான் போட்டி
ஆர்கே நகர் தேர்தலில் மக்கள் தங்களுக்கு நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள் என்றார். மேலும் ஆர்கே நகரில் தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்றும் அவர் கூறினார்.

பலர் வெற்றி பெற்றுள்ளனர்
துரோகிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இரட்டை இலைச்சின்னத்தை நிச்சயம் மீட்போம் என்றும் தினகரன் தெரிவித்தார். இரட்டை இலையை ஏதிர்த்து ஏற்கனவே பலர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications