சிறையிலிருந்து நினைத்த நேரத்திற்கு சசிகலா வெளியில் சென்று வந்தது உண்மைதானோ??
சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பும் வீடியோக் காட்சி பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபிப்பதாக உள்ளதாக கருத்து வலுத்துள்ளது.
Recommended Video

பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளி சசிகலா ஜாலியாக வெளியே போய் விட்டு எந்த பதற்றமுமின்றி சிறைக்குள் மீண்டும் வரும் காட்சிகள் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
குற்றம் செய்தவர் தனது குற்றத்தை உணர்வதற்காகவே நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கிறது. இந்த தண்டனைக் காலத்தில் தண்டனை பெற்றவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து வெளிவரும் போது திருந்திய மனிதராக வேண்டும் என்பதே சட்டங்கள், நீதிமன்றங்கள், தண்டனைகளின் நோக்கம். ஆனால் எந்த தண்டனை என்றாலும் அது தங்களை ஒன்றும் செய்யாது என்பதை வசதி படைத்தவர்கள் அவ்வபோது நிரூபித்து வருகின்றனர்.
பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சகல வசதிகளும் செய்து தரப்படுவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறினார். ஆனால் போலீஸ் அதிகாரிகளிடையிலான சண்டையால் இது போன்று அவதூறு கூறுகிறார் என்று எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டினார். அதிகாரி ரூபாவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப கடந்த மாதம் சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருந்து வெளியே சென்று விட்ட பயந்து பயந்து பதுங்கி பதுங்கி உள்ளே வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
இரண்டாவது வீடியோ
அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பரபரப்பு அரசியல் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் இருந்து விலக்குவதற்கான பேச்சுவார்த்தையை கட்சியினருடன் முதல்வர் பழனிசாமி நடத்தி வருகிறார். இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு உள்ளே வரும் மற்றொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மற்றொரு ஆங்கிள் வீடியோ
முதல் வீடியோவில் பதுங்கி பதுங்கி சிறைக்கு அருகில் இருக்கும் கேட் வாசலில் காத்திருந்த சசிகலா, இந்த வீடியோவில் எந்த பதற்றமுமின்றி உள்ளே செல்வது தெரிகிறது. எனினும் இதே உடை மற்றும் கைப்பை வைத்திருப்பதால் அநேகமாக இரு மற்றொரு சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

உயர் அதிகாரிகளின் உத்தரவா?
சிறையில் இருக்கும் காவலர்கள் கேட்டை திறந்து விட்டு காத்திருப்பதை பார்த்தால் நிச்சயம் இது உயர்அதிகாரிகளின் உத்தரவாகத் தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. சுடிதார் உடையில் கையில் பையுடன் சசிகலா செல்ல, அவரைப் பின் தொடர்ந்து செல்கிறார் இளவரசி.

பணம் இருந்தால்
எது எப்படியாக இருந்தாலும் குற்றவாளி ஒருவர் ஜாலியாக ஷாப்பிங் போய் விட்டு போலீஸ்காரர்கள் இருக்கும் போதே எந்த பதற்றமுமின்றி சிறைக்குத் திரும்புகிறார். இந்த சிசிடிவி காட்சிகள் பணம் இருந்தால் சிறைக்கம்பிகளையும் அவ்வபோது திறந்துகொண்டு விரும்பியபடி வெளியே சென்று வரலாம் என்பதை உணர்த்தியுள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications
