பெங்களூரு சிறையில் ஜெயலலிதாவின் பச்சைக்கலர் புடவை... - சசி சென்டிமெண்ட்
ஜெயலலிதாவின் புடவை பெங்களூரு சிறைக்கு போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து அவர் அடிக்கடி ஆசையாக உடுத்தும் பச்சைக்கலர் புடவையை பெங்களூரு சிறைக்கு எடுத்துக்கொண்டு போயிருக்காராம் விவேக். ஜெயலலிதா நினைவாக அந்த புடவை வேண்டும் என்று சசிகலா கேட்டதாலேயே அதை கொண்டு போய் கொடுத்தாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா. கூடவே அவரது அண்ணன் மனைவி இளவரசியும் பேச்சுத்துணைக்கு இருக்கிறார்.
ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்பி விட்டார். அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தனது சொத்து குவிப்பு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சிறைபறவை
போயஸ்தோட்டத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த சசிகலா இப்போது சிறைபறவையாகி விட்டார். கொசுக்கடை, சாப்பாடும் சரியில்லை. கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பது வேறு நோயை தீவிரப்படுத்தி விட்டதாம்.

யாரும் வருவதில்லை
இப்போதெல்லாம் சசிகலா, இளவரசியை பார்க்க கட்சி நிர்வாகிகள் யாருமே போவதில்லையாம். அவர் மீது அதீத அனுதாபிகளாக இருக்கும் சில எம்எல்ஏக்கள் மட்டுமே எப்போதாவது சென்று வருகிறார்களாம்.

விவேக்
இளவரசியின் மகன் விவேக்தான் அடிக்கடி தனது அம்மாவை பார்க்க பெங்களூரு சிறைக்கு போகிறார். கூடவே அத்தை சசிகலாவையும் பார்த்து விட்டு வருகிறார். சமீபத்தில் விவேக் போன போது கட்சி, ஆட்சி நிலவரங்கள் பற்றி சசிகலா விவாதித்தாராம்.

அக்கா நினைவு
அப்போது விவேக்கிடம் அக்கா நினைவாகவே இருக்கிறது, அவரது புடவையாவது கொண்டு வா, நான் என்னுடன் வைத்துக்கொள்கிறேன் என்று விவேக்கிடம் சொன்னாராம் சசிகலா, இதையடுத்து பச்சைக்கலர் புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு போனாராம்.

புடவையாவது சிறையில் இருக்கட்டும்
ஜெயலலிதாதான் சிறை தண்டனையில் இருந்து தப்பி விட்டார், அவரது புடவையாவது இருக்கட்டும் என்று நினைத்தாரோ சசிகலா, அதான் தன்னுடன் சிறையில் புடவையை வைத்துக்கொள்ளலாம் என்று எடுத்து வரச்சொல்லியிருப்பார் என்று மனதுக்குள் நினைக்கின்றனர் ஜெயலலிதாவின் அனுதாபிகள்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications