ஜெ. ஆன்மா இளைப்பாறும் வகையில் பிறந்த நாள் கொண்டாடுவோம்.. சிறையில் இளைப்பாறும் சசி கடிதம்!
மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா இளைபாறும் வகையில் அவரது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று பெங்களூரு சிறையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அக்கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு; சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனைப்பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, அங்கிருந்தவாறு ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுகவினருக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 33 ஆண்டுகள் ஜெயலலிதாவிடன் இருந்து பிறந்த நாளை கொண்டாடினேன் என்றும் அவரது அன்பையும் பாசத்தை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிமுகவை காக்கவும், அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தவும் சபதம் ஏற்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியை எதிரிகள், துரோகிகள் வீழ்த்த நினைத்த போது ஜெயலலிதாவின் ஆன்மாதான் நம்மை வழி நடத்தியது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சசிகலா, அவரது ஆன்மா இளைபாறும் வகையில் அவரது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்றும், ஏழைய எளியோருக்கு உணவு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்துமாறும் அவர், அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications