"சத்யமேவ ஜெயதே.." விடுதலைக்கு பிறகு எடியூரப்பா கூறியது! #CBI Special Court
வாய்மையே வென்றுள்ளது என்று, லஞ்ச வழக்கில் விடுதலையானதும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: முதல்வராக பதவி வகித்தபோது ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். இதன்மூலம், வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பா மீதான லஞ்ச புகாரை அரசு தரப்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை எனக்கூறி சிறப்பு சிபிஐ கோர்ட் இன்று அவரை விடுதலை செய்தது. தீர்ப்பின்போது நீதிமன்றத்திற்குள் வந்து அமர்ந்திருந்தார் எடியூரப்பா. தீர்ப்பு வெளியான பிறகு மகிழ்ச்சியோடு கோர்ட்டுக்கு வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

நீதிமன்றம் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது எனக்கு நீதி கிடைத்துள்ளது. வாய்மை வென்றுள்ளது. கடினமான கால கட்டத்தில், ஆதரவாக இருந்த, எனது நலம் விரும்பிகள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் பெருமையுடன் மாநிலம் முழுக்க பிரயாணம் செய்து கட்சியை வளர்ப்பேன். மீண்டும் பாஜகவை கர்நாடகாவில் ஆட்சிக்கு கொண்டுவருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எடியூரப்பா தனது டிவிட்டர் கணக்கில், சத்யமேவ ஜெயதே என கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications