இந்தியத் தொழிலாளியை மிருகத்தனமாக அடித்து உதைத்த சவுதி நபர்.. வைரலாகும் வீடியோ
டெல்லி: இந்தியத் தொழிலாளர் ஒருவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நபர் மிருகத்தனமாக அடித்து உதைத்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடித்த நபர் சவுதியைச் சேர்ந்த என்ஜீனியர் என்றும், அடிபட்டவர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் என்றும் தெரிய வந்துள்ளது.
மெக்காவில் உள்ள பெரிய மசூதி விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் இவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சவுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல்...
முதலில் இது பேஸ்புக்கில் போடப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது.

கண்களில் ரத்தம் வருகிறது...
அந்த இந்தியத் தொழிலாளர் தொடர்ந்து மன்னிப்பு கேட்டும் அடங்காத அந்த கொடூர குணம் படைத்த இரக்கமே இல்லாத சவுதி என்ஜீனியர் தொழிலாளியை மிகக் கொடூரமாக சரமாரியாக அடிக்கிறார். கையில் சிறிய சவுக்கை வைத்துக் கொண்டு அவர் அடித்து வெளுப்பது பார்ப்பவர்களின் கண்களில் ரத்தம் வரவழைப்பதாக உள்ளது.

இது உங்கள் உரிமையா?
இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் தரேக் பதா கூறுகையில், "இந்தியத் தொழிளியைப் போட்டு சரமாரியாக அடிக்கிறார் இந்த சவுதி. ஆனால் இந்தியாவில் ஒரு சவுதி தூதரக அதிகாரி நேபாளப் பெண்களை பலாத்காரம் செய்கிறார். இதை சவுதிக்காரர்கள் உரிமையாக எடுத்துக் கொண்டுள்ளனரா?" என்று கேட்டுள்ளார்.

நடவடிக்கை தேவை...
இந்த விவகாரம் சவுதியிலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட என்ஜீனியர் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் ஒருவர் சவுதி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோரிக்கை மனு...
வக்கீல் அப்துல் அஜீஸ் அல் முஷாதி இதுதொடர்பாக சவுதி அரசிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த என்ஜீனியரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க அதில் அவர் கோரியுள்ளார்.
மனிதாபிமானமற்ற செயல்...
இது மனிதாபிமானமற்ற செயல். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications