காவிரி மேலாண்மை வாரியம்.... இழுத்தடித்தே நினைத்ததை சாதித்த மத்திய அரசு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலேயே நினைத்ததை சாதித்திருக்கிறது மத்திய அரசு.
Recommended Video

டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமலேயே மத்திய பாஜக அரசு இழுத்தடித்தே நினைத்ததை சாதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

6 வார காலம் முடிவடைந்த பின்னர் உச்சநீதிமன்றத்தில் சந்தேகம் கேட்டது மத்திய அரசு. உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கியது.
ஆனாலும் மே3-ந் தேதியன்றும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவில்லை. கர்நாடகா தேர்தலுக்காக மேலும் அவகாசம் கேட்டது.
அப்போது மத்திய அரசை கண்டிப்பது போல் கண்டித்து மே 8-ந் தேதிக்குள் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இன்றும் காவிரி மேலாண்மை வாரிய வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
இப்போதும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டிக்காமல் மே 14-ந் தேதி வரை அவகாசம் கொடுத்திருக்கிறது. அதாவது மே 12-ந் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இப்படி ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசும் தமிழகத்தை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் கர்நாடகா சட்டசபை தேர்தல் ஆதாயத்துக்காக நினைத்ததை சாதித்து காட்டியிருக்கிறது.
தமிழகமும் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று என்பதை பற்றி கவலைப்பட மத்திய அரசு தயாராக இல்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்துவோம் என்பதில் அப்படி ஒரு பிடிவாதம் காட்டி சாதித்திருக்கிறது மத்திய அரசு,
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications