தயாநிதி மாறனுக்கு எதிரான சட்டவிரோத எக்சேஞ்ச் வழக்கு அக்.30க்கு ஒத்திவைப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிரான சட்டவிரோத எக்சேஞ்ச் வழக்கின் விசாரணை அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி.க்கு பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாநிதி மாறன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அமைச்சர் என்ற முறையில் சேவை இணைப்புகள் பெற தயாநிதி மாறனுக்கு உரிமை இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் இணைப்புகள் பெற்றார். அவருக்கு முன்பிருந்த அமைச்சர்களும் சேவை இணைப்புகள் பெற்றுள்ளனர். இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் தயாநிதி தாக்கல் செய்துள்ள புதிய மனுவை படித்துப் பார்த்து பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.க்கு 2 வார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை அக்டோபர் 30-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications