Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து மதத்திலிருந்து.. வேறு மதத்திற்கு மாறியவர்களுக்கு.. SC இடஒதுக்கீடு கூடாது.. உ.பி கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

அலகாபாத்: இந்து, சீக்கியம், பவுத்த மதங்களில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள், தொடர்ந்து பட்டியலினத்தவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடுகளை பெறுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதத்தினர் பட்டியல் இன சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான சரிபார்ப்பு பணிகளை, ஆய்வுகளை மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

uttar pradesh

மதமாற்றத்திற்குப் பின்னரும் பட்டியல் இடஒதுக்கீடு தொடர்வது அரசியலமைப்புக்கு எதிரான மோசடி எனவும், பொதுக் கொள்கையைச் சுரண்டும் செயல் இது, இது சமூக நீதிக்கு எதிரானது எனவும் நீதிமன்றம் கூறியது. சட்டப்படி சாதி உரிமைகள் மத அடையாளத்துடன் இணைந்தவை. மதம் மாறிய பின் இந்த சாதி உரிமைகள் நீடிக்காது என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

என்ன வழக்கு?

ஜிதேந்திர சஹானி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனது சொந்த நிலத்தில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைப் போதிப்பதற்காக கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது காவல்துறை தன்மீது தவறாக வழக்குப் பதிவு செய்ததாக சஹானி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மதங்களுக்கு இடையே பகைமையை வளர்த்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கீழ் தன் மீது போலீஸ் வழக்கு பதிந்ததால், அந்த புகார்களை நீக்க வேண்டும், நான் மதமாற்றம் செய்ய முயற்சி செய்யவில்லை, கிறிஸ்துவின் போதனைகளை பரப்பவே நினைத்தேன் என்று ஜிதேந்திர சஹானி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில், கேவட் சமூகத்தைச் (SC) சேர்ந்த சஹானி, இந்துவாக உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தபோதும், உண்மையில் கிறிஸ்தவராக மதமாற்றமடைந்தவர் என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. கிறிஸ்துவராக மதம் மாறிவிட்ட இந்து என்று கூறி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்று போலீஸ் கூறியது.

மேலும் போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சஹானி ஏழை மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தூண்டியதாகவும், இந்து என்று கூறி மக்களை அழைத்து கிறிஸ்து பற்றி பேசி மதமாற்றம் செய்ய நினைக்கிறார், அவர் இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கில்தான் சஹானிக்கு கோர்ட் கண்டனங்களை தெரிவித்தது. அதோடு அவரின் மனுவை தள்ளுபடி செய்து, போலீசின் நடவடிக்கை சரியானதே என்றும் கூறியது.

சலுகைகள் கூடாது

இந்த வழக்கில், 1950 அரசமைப்புச் சட்டம் (பட்டியல் சாதி) ஆணைப்படி, இந்து, சீக்கிய, பௌத்தர் அல்லாதோர் பட்டியல் சாதி உறுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள் என உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. கிறிஸ்தவரான சஹானி, நீதிமன்ற ஆவணங்களில் தன்னை இந்துவாகக் காட்டி மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய உறுதிமொழிப் பத்திரங்கள் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.

மத்திய அமைச்சரவை செயலர், உத்தரப் பிரதேச தலைமைச் செயலர், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை அல்லது கூடுதல் தலைமைச் செயலர், மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான சட்ட விதிகளை ஆய்வு செய்து, சட்டம் அதன் உண்மையான பொருளில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடுமையான உத்தரவு

மேலும் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள், தொடர்ந்து பட்டியலினத்தவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடுகளை பெறுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில் சாதிப் பாகுபாடு இல்லை என்பதால், மதமாற்றத்திற்குப் பின் பட்டியல் சாதி அந்தஸ்து செல்லாது என ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த அமர்வு சுட்டிக்காட்டியது. மேலும், மதம் மாறிய பின் இடஒதுக்கீடு சலுகைகளைக் கோருவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதையும் கோர்ட் எடுத்துக்காட்டியது.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதத்தினர் பட்டியல் இன சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான சரிபார்ப்பு பணிகளை, ஆய்வுகளை மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+