தகுதிநீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலா நீக்கம்... புதிய நீதிபதியை நியமித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி
தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலா நீக்கப்பட்டார்.
Recommended Video

டெல்லி: தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலாவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டு புதிய நீதிபதியை நியமித்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

தலையிட முடியாது
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16-ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் அளித்தனர். அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

3-ஆவது நீதிபதி
இதையடுத்து நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். அப்போது அவர் கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

மூத்த நீதிபதி நியமனம்
தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். இதை எதிர்த்து தங்கதமிழ் செல்வனை தவிர்த்து 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

தள்ளுபடி
அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் தகுதிநீக்க வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3-ஆவது நீதிபதி விமலாவை நீக்கியது. அவருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications