ராகுல் காந்தியின் குடியுரிமை.... சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இங்கிலாந்து நிறுவனம் ஒன்றின் ஆவணங்களில் தம்மை இங்கிலாந்து நாட்டு குடிமகன் என ராகுல் காந்தி கூறியிருக்கிறார் என்பது பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார். இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநலன் வழக்கை ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க அந்த பெஞ்ச் மறுத்துவிட்டது.
இந்நிலையில் எம்.எல்.சர்மாவின் பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications