ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கு ஜூலைக்கு ஒத்திவைப்பு!
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1992ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பரிசு பொருள் பெற்றதாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி சி.பி.ஐ மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஹார், இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை மனுதாரர்கள் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகவும்,வழக்கில் இறுதி விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் சி.பி.ஐ கோரிக்கை வைத்தது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் அளிக்க 4 வார அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், ஜனவரி அல்லது பிப்ரவரியில் இறுதி விசாரணை நடடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ.யின் கோப்புகளை சரிபார்க்க ஜெயலலிதா தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணயை ஜூலைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications