காவிரி மேலாண்மை வாரியம்.. டிராப்ட்டை திருத்துங்க.. மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் திடீர் பாய்ச்சல்
காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தில் திருத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தில் திருத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் வரைவு திட்டம் தயாரிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடக தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டிருந்ததால் வரைவு திட்டம் அமைக்க காலஅவகாசம் கோரியது.

இதைத் தொடர்ந்து அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் கர்நாடகா அரசும் ஒப்புக் கொண்டது.
அதன்படி வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும்.
காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது
காவிரியில் புதிய அணைகள் கட்ட கூடாது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரத்தை தர வேண்டும். திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளையே தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
