தேர்தலில் அனைத்து வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
தேர்தல்களில் யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையுமே நிராகரிக்கிற உரிமை வாக்காளுக்கு உண்டு. அத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "மேலே உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை" என்பதை பதிவு செய்யக் கூடிய பட்டனையும் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். மேலும் இப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்கிற வாக்காளர் பற்றிய விவரத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி நிராகரிப்பு வசதியை ஏற்படுத்தினால் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வால் நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications