விஜயகாந்துக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்க மறுத்து சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

SC rejects TN govt's petition against Vijayakanth
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களின்போது முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இந்த அவதூறு வழக்குகளில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து இடைக்கால விலக்கு அளித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுத்தது.

இதையடுத்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+