தமிழகத்துக்கு பாதிப்பில்லா வகையில் காவிரியின் குறுக்கே அணை.. உச்ச நீதிமன்றம் கருத்து
தமிழகத்துக்கு பாதிப்பில்லா வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் காவிரியில் அணை கட்டலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வெளியானதால் இதை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேலும் தமிழகத்துக்கு அதிக அளவிலான தண்ணீர் விடவேண்டும் என்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் மட்டுமே முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications