மேலாண்மை வாரியத்துக்கு திடீர் எதிர்ப்பு... மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் சுளீர் கேள்விகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இந்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோர் எழுப்பிய கேள்விகள்:
- காவிரி மேற்பார்வை குழுவுக்கு ஒப்புக் கொண்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பது ஏன்?
- காவிரி நதிநீர் விவகாரத்தில் கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முதலில் ஒப்புக் கொண்ட நிலையில் தற்போது திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
- அக்டோபர் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதா?
- தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட காவிரி நீரின் அளவு என்ன?
- தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
இவ்வாறு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications