கர்நாடகாவும் இந்தியாவுக்குள்தான் இருக்கிறது... உத்தரவை செயல்படுத்துங்க- சுப்ரீம்கோர்ட் வார்னிங்
டெல்லி: கர்நாடகாவும் இந்தியாவின் ஒருபகுதிதான்... உச்சநீதிமன்ற உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கர்நாடகா அரசு இந்த உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த முறை விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் சற்று காட்டமாக கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்து காவிரி நீரை திறக்க உத்தரவிட்டிருந்தனர். அதையும் கர்நாடகா அரசு ஏற்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கர்நாடகாவை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். நீதிபதிகள் தெரிவித்த கண்டனம்:
- கர்நாடகா அரசு அரசியல் சட்டத்தையே சிதைத்துவிட்டது.
- இந்தியா கூட்டாட்சி அமைப்பை கொண்டது.
- கர்நாடகாவும் இந்தியாவின் ஒருபகுதிதான்...
- இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் கடமை.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவுக்கு கர்நாடகாவும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.
- உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கர்நாடகா அரசு அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.
- கர்நாடகா அரசு பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.
- உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்காவிட்டால் அதை எப்படி செயல்படுத்துவது என எங்களுக்கு தெரியும்.
- உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு நீதிமன்றத்தின் கடுமையான கோபத்துக்குள்ளாக நேரிடும்.
இவ்வாறு நீதிபதிகள் எச்சரித்தனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications