சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
Recommended Video

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களிலும், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
[ அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29-ஆம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட் ]
பல வருடமாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

யார் வழக்கு
சபரிமலை கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றினார்கள்.

என்ன கோரிக்கை
இது பெண்களின் உரிமைக்கு எதிரானது என்று மனுவில் கூறப்பட்டது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறப்பட்டது. அதே சமயம் சபரிமலை கோவில் நிர்வாகம் இந்த மனுவிற்கு எதிராக கடுமையாக வாதம் செய்தது. ஆனால் கேரளா அரசு சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியது.

நீதிமன்றம் என்ன கூறியது
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த நடைமுறை அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஏற்கனவே நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சட்ட பிரிவு 14,15,17, 26, 27 ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளது என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தனர்.

நாளை தீர்ப்பு
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்க இருக்கிறது. நாளை காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications