நிர்பயா நிலை ஏற்படும்!... பெங்களூரு பள்ளி மாணவியை மிரட்டிய மாணவர்கள்!!
பெங்களூரு: டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போல செய்துவிடுவோம் என்று பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் , மாணவர்கள் சிலர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள பிரபல பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுடன் செல்போனில் செக்ஸ் அரைட்டைக்கு வர மறுத்துவிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, நிர்பயா ஸ்டைலில் பாலியல் கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.

செல்போனில் அரட்டை
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் செக்ஸ் பற்றி பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை
அதிர்ச்சியான நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத் தரப்பில் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

போலீசில் புகார்
அதனால் இந்த விசயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதில் இந்த மிரட்டல் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் பற்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடரும் செயல்கள்
பெங்களூருவில் பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. பாலியல் தொந்தரவு புகார்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் உடன் படிக்கும் சக மாணவர்களே இது போன்ற செக்ஸ் தொல்லைக்கு மாணவியை உட்படுத்திய விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications