பள்ளி மாணவிகளுக்கு வேனில் வைத்து பாலியல் தொல்லை - டிரைவர், உதவியாளர் கைது!
டெல்லி: டெல்லியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரும், உதவியாளரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியில் ஒரு பள்ளியில் படிக்கும் சிறுமிகள் தினமும் வீட்டில் இருந்து வாடகை வேனில் சென்று வந்தனர். இந்த வேனில் டிரைவராக சரண்ஜீத் சிங், உதவியாளராக குல்விந்தர் என்பவரும் பணிபுரிந்தனர்.

இவர்கள் இருவரும் சிறுமிகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும் திரும்பும் போது வேனில் வைத்தே அவர்களிடம் பாலியல் குறும்பு செய்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட சில சிறுமிகள் பள்ளிக்கு செல்ல மறுத்தனர். அவர்களிடம் பெற்றோர் ஏன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய் என்று விசாரித்த போது வேன் டிரைவர் குறும்புத்தனம் செய்வதாக தெரிவித்தனர்.
உடனே பெற்றோர் தங்கள் மகளுடன் போலீசில் சென்று வேன் டிரைவர் மீது புகார் செய்தனர். இதேபோல் மேலும் சில சிறுமிகளின் பெற்றோரும் புகார் செய்தார்கள்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சரண்ஜீத் சிங், உதவியாளர் குல்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். பல சிறுமிகள் பயந்து போய் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை பெற்றோரிடம் சொல்வதில்லை.
இதை இருவரும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தினமும் இதுபோல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் சிறுவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications