6 மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. ராஜஸ்தானின் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் கோர விபத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசு பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பஜன்லால் சர்மா செயல்பட்டு வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் மாவட்டம் மனோகர் தானா பகுதியில் பிப்லோடி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு வரை வகுப்பறைகள் உள்ளன.

இன்று காலையில் வழக்கம்போல் பள்ளி செயல்பட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் உள்ள கட்டத்தில் பள்ிள ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 60 மாணவர்கள் வரை இருந்தனர்.
இந்த வேளையில் திடீரென்று திடீரென்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இடிபாடுகளுக்குள் சிக்கய ஆசிரியர்கள், மாணவர்கள் அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டதும் அருகே வசிக்கும் மக்கள் ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களை பொதுமக்கள் மீட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 4 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர் 17 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி ஜலாவர் மாவட்ட எஸ்பி அமித் குமார் கூறுகையில், ‛‛பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 மாணவர்கள் ஜலாவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 3 முதல் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்'' என்றார். இதற்கிடையே தான் மருத்துவ சிகிச்சையில் இருந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.
முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இந்த பள்ளி கட்டடம் சிதிலமடைந்து பாழைடைந்துள்ளது. இந்த கட்டடத்தை புனரமைக்க பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக அங்கு கனமை பெய்து வந்துள்ளது. இதனால் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications