சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. போன் சுவிட்ச் ஆப்.. ஆல் இஸ் வெல்.. திக்விஜய் சிங் ஷாக் விளக்கம்!
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
போபால்: காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு கட்சிக்குள் நிலவிய சிறுசிறு குழப்பங்கள் தற்போது மொத்தமாக ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.
மொத்தமாக 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

எப்படி நடந்தது
இதை தடுக்கும் பொருட்டு மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 17 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி
காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிந்தியாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் எங்களால் அவரிடம் பேச முடியவில்லை. அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நம்பிக்கை
அவர் குணம் அடைந்ததும் எங்களிடம் பேசுவார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாக நிலையாக இருக்கிறது. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் சிலர் தோல்வி அடைவார்கள். மக்களின் வாக்குகளை அவமதிக்கும் நபர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். அவர்களுக்கு மாநில மக்களே நல்ல பாடம் புகட்டுவார்கள்.

ஒன்று சொல்வேன்
என்னிடம் நீங்கள் கேட்டால் நான் ஒன்று சொல்வேன். இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யார் நேர்மையானவர்களோ, யார் நல்லவர்களோ அவர்கள் காங்கிரஸ் பக்கம் இருப்பார்கள். அவர்கள் காங்கிரஸ் உடன் நெருக்கமாக இருப்பார்கள்.தற்போது நிலவி வரும் பிரச்சனை விரைவில் சரியாகும் என்று திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications