பதன்கோட் அருகே ஆயுதங்களுடன் 2 பேர் நடமாடுவதாக தகவல்.. தீவிரவாதிகளா என சந்தேகம்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப்படைத் தளம் மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலே இன்னும் முடிவடையாத நிலையில் அதற்கு அருகே ஒரு கிராமத்தில் ஆயுதங்களுடன் 2 பேர் நடமாடுவதாக வந்த தகவலால் பரபரப்பு கூடியுள்ளது.
பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவன் மட்டுமே உயிருடன் உள்ளே சிக்கியுள்ளான். அவனைப் பிடிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் பதன்கோட் அருகே ஒரு கிராமத்தில் 2 பேரை ஆயுதங்களுடன் பார்த்ததாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. பதன்கோட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மன்வால் என்ற கிராமம். அங்கு ஆயுதங்களுடன் இரண்டு பேரை இன்று காலையில் பார்த்ததாக கிராமவாசி ஒருவர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்த இருவரும் ஒரு காரைப் பறித்துச் சென்றதாகவும் தகவல் வந்தது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் ஆயுததாரிகள் யாரேனும் அப்பகுதியில் உள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications