ஜார்க்கண்ட் 2வது கட்ட சட்டசபை தேர்தல்.. 62.40% வாக்குகள் பதிவு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற, 2வது கட்ட தேர்தலில், 62.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல், கடந்த 2014ம் ஆண்டு, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவு, அந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி வெளியானது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்ட பின்னர், மாநில சட்டசபையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இது முதல் தடவையாகும், பாஜக மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்றது.
ரகுவர் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 10 வது முதல்வராக 2014 டிசம்பர் 28 அன்று பதவியேற்றார். பிப்ரவரி 11ம் தேதி, 2015 அன்று 6 ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதால், இந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக போராடி வருகிறது. இந்த நிலையில் இன்று 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடந்தது. 62.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. நக்சலைட் ஆதிக்கம், தாக்குதல் உள்ளிட்டவை இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் முன் வைக்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications